நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையானது எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.

புதிய வழமையின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை நிலையாக பேணும் நோக்கில் இந்த தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) காலை கொவிட் ஒழுப்பு குழுவுடனான தொலைக்காணொளி சந்திப்பின்போது எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், பொது இடங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களுக்கு செல்லும்போது தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்குவதற்கான சாத்தியம் மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.