பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்

பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிலுள்ள ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்கள் முகப்புத்தகத்தின் (Facebook) மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தமக்கெதிரான வெறுக்கத்தக்க கருத்துக்களை பதிவிடுவதற்கு அனுமதி வழங்கியதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் பேஸ்புக் மீது குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் தளமாக பேஸ்புக் காணப்படுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ரோஹிங்யா அகதிகளால் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் 150 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மெட்டா நிறுவனம் இதுவரை எவ்வித கருத்தையும் வௌியிடவில்லை.

24 மணிசேவையை வழங்கி வருகிறது யாழில் தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்