பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன விடுத்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, தமது பேருந்துகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரமற்றவையென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, காவல்துறைமா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
எவ்வாறிருப்பினும். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, தனியார் பேருந்துகளில் 25 சதவீதமானவை மண்ணெண்ணெய்யில் இயங்குவதாக தெரிவித்தார்.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com