புதிதாக நிறுவப்பட்டுள்ள பயிற்சி நிலையத்தினூடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 160 பத்திக் மற்றும் உள்ளூர் ஆடை தொழிற்சாலை பயிற்சி நிலையங்களைத் திறந்து வைத்து உரையாற்றும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது நாடு பல இனக்குழுக்கள் மற்றும் மதங்களை உள்ளடக்கிய நாடாகும்.
எமது மக்களின் எண்ணங்கள், அபிலாஷைகள், வாழ்க்கை முறைகள் மற்றும் நாகரீகங்கள் மிகவும் வண்ணமயமானவை.
நம் நாட்டில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, கைத்தறி ஆடைகள் மிகவும் பிரபலமாக இருந்தன.
ஆனால் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து வெளிநாட்டு ஆடைகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டன.
இதனால் நமது உள்ளூர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.
திறந்த பொருளாதாரம் எமது நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது உள்ளூர் விடயங்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டம் அப்போது இருக்கவில்லை.
இதன் விளைவுகளைப் பல தசாப்தங்களாக அனுபவித்து வருகிறோம்.
எனவே, உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து, அந்த உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க வேண்டிய காலம் கிட்டியுள்ளதாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! ( tharanysupermarket.com )