சந்தையில் தொடர்ந்து பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், எதிர்காலத்தில் பால்மா விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் எனவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம் மற்றும் களஞ்சியசாலைகளின் கட்டண அதிகரிப்பு போன்ற காரணங்களால் பால்மா இறக்குமதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு விலை தீர்மானிக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com