கொழும்பு துறைமுகத்தில் தேங்கியிருக்கும், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1000 கொள்கலன்களை, விடுவிப்பதற்கு டொலர் தேவை என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போதுமான டொலர்களை வங்கிகளுக்கு அனுப்புமாறு அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்காது போனால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்று இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பருப்பு, அரிசி, சீனி, வெள்ளைப்பபூடு உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையே துறைமுகத்தில் இருந்து உடனடியாக விடுவிக்கவேண்டியுள்ளது என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com