ஐந்து வருடங்களுக்கு மேலாகப் பயிரப்படாத வயல் காணிகளில் தெங்கு செய்கையை மேற்கொள்ளப் பெருந்தோட்டத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், தெங்கு செய்கையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத் துரித இலக்கம் மற்றும் வட்ஸ்அப் இலக்கம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 1928 என்ற துரித இலக்கத்துடன் தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதுதவிர, 070 400 19 28 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பெருந்தோட்டத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.