பயிரிடப்படாத அரச காணிகளில் தேயிலையை பயிரிட நடவடிக்கை

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை பயிர் செய்கையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தேயிலை பயிர்ச்செய்கையை முறைப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் 2022 ஆம் ஆண்டில் தேயிலை பயிர்ச்செய்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து தோட்டங்களிலும் மீண்டும் தேயிலையைப் பயிரிடுவதற்கு தேவையான அனைத்து மானியங்களையும், செடிகள் மற்றும் உரம் போன்றவற்றை இலவசமாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்