தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 செத்தெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2021 அக்டோபரில் 8.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.
இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 செத்தெம்பரின் 10.0 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 11.7 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 செத்தெம்பரின் 3.0 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 5.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 செத்தெம்பரின் 5.5 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com
பணவீக்கம் என்றால் என்ன கீழே இருக்கும் வீடியோக்களை பார்த்து நீங்களும் சற்று புரிந்து கொள்ளுங்கள்