நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையே நாளைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
சீனி இறக்குமதிக்கு தேவையான டொலரை பெற்றுக் கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்க கூடும் என நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பூண்டுலோயாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Post Views: 56