நைட்ரஜன் உரத்தை இலங்கைக்கு விற்று பாரிய இலாபம் பெறும் இந்தியா

நனோ நைட்ரஜன் உரத்தை இலங்கைக்கு வழங்குவதன் மூலம் பாரிய இலாபத்தை இந்தியா ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார்.

நனோ நைட்ரஜன் உர விலையை குறைப்பதற்காக இராஜதந்திர ரீதியில் செயற்படுவதாக அவர் கூறினார்.

21 இலட்சம் லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள இந்திய விவசாய உர கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து பெறுவதற்காக விவசாய திணைக்களம் பதிவு செய்துள்ளது.

இதில் 500 மில்லிலிட்டர் திரவ உரம் 12.45 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நாணயமாற்று விகிதத்தின் பிரகாரம், 2520 ரூபாவை அண்மித்த தொகையாக இது அமைந்துள்ளது.

எனினும், இந்தியாவில் அதன் விலை 3.23 அமெரிக்க டொலராக காணப்படுவதுடன், 654 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் இந்திய விவசாய உர கூட்டுறவு நிறுவனத்தின் பேராசிரியர் அனில் யாதவ் தெரிவித்ததாவது,

இந்தியாவில் யூரியா பாவனையானது மிகவும் அதிகமாகும். அரசாங்கத்தினாலும் யூரியாவிற்கு மானியம் வழங்கப்படுகின்றது. இதனால் இந்திய சந்தையில் எமக்கு பாரிய போட்டி காணப்படுகின்றது. எனவே யூரியாவின் விலையை காட்டிலும் நூற்றுக்கு 10 வீத குறைப்பிலேயே நாம் இதனை விற்பனை செய்கின்றோம்.

இந்தியாவில் திரவ உரத்தின் விலை 240 இந்திய ரூபா என அனில் யாதவ் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்தியாவில் குறித்த 500 மில்லிலிட்டர் உரத்தை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்படும் சில்லறை விலைக்கும் மேலதிகமாக 1867 ரூபாவை செலுத்தி இலங்கை பெற்றுக்கொள்ள நேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த தொகையை குறித்த உரத்தின் மொத்த கொள்வனவிற்கு செலுத்தவேண்டி ஏற்பட்டால், மேலதிகமாக 7,841 மில்லியன் ரூபா செலவு ஏற்படும்.

இந்த விடயம் தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே தெரிவித்ததாவது,

இந்த நடவடிக்கை உர அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது. இம்முறை இந்த நிறுவனத்துடன் கலந்துரையாடி 10 டொலர் குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இதனை மேலும் குறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். பாரிய இலாபமொன்றை வைத்துக்கொண்டு அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதாக எமக்கும் புரிகின்றது. நாம் இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக இதனை மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

🛒 தாரணி சூப்பர்மார்கெட்
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்