நாளையுடன் மீண்டும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பூட்டு!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை(03) முதல் மீண்டும் மூடப்படவுள்ளது.

வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவு பாதிக்கப்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளாந்தம் 6,500 மெற்றிக் டன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்படுகின்றது.

இந்நிலையில் டொலர் பற்றாக்குறை காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் திகதி தற்காலிமாக மூடப்பட்டு 22 நாட்களுக்குப் பின்னர் மீளத் திறக்கப்பட்டது.

இந்தநிலையில் நாளைய தினம் மூடப்படவுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையில் இந்த மாத இறுதியில் மீளத் திறக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் ஒரு தொகுதி மசகு எண்ணெய் நாட்டுக்குக் கிடைக்கப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன் பில தெரிவித்துள்ளார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்