குளிர்காலத்தை முன்னிட்டு நான்கு முக்கிய சந்தைகளில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை சுற்றுலாத்துறை தயாராகிறது.
ஐக்கிய அரபு இராச்சியம், ஜெர்மன், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை இலக்கு வைத்து இந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியம், ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் சுற்றுலாத்துறையின் பாரம்பரிய முக்கிய சந்தைகளாகும்.
அத்துடன் இந்தியா ஆசியக் கண்டத்தில் முக்கிய மூலச் சந்தையாகும்.
இந்தநிலையில் குறித்த நாடுகளின் பிரதான ஊடகங்கள், சமூக வலைத்தளங்களினூடாக ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
🛒 தாரணி சூப்பர்மார்கெட்
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com
Post Views: 28