நாட்டின் பல பகுதிகளில் மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com
திடீர் மின் விநியோகத் தடை தொடர்பில் உள்ளக விசாரணை Tuesday, 30 November 2021
மின்சார சபை கட்டமைப்பின் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் வெளியேறியமையே, நேற்று ஏற்பட்ட திடீர் மின் தடையை வழமைக்கு கொண்டுவர தாமதமானமைக்கான காரணமாகும் என மின்சார தொழிநுட்ப, பொறியியலாளர் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக குறித்த மின்தடை இயற்கை காரணங்களால் இடம்பெற்றதா? அல்லது திட்டமிட்ட ஒன்றா? என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.யு நிஸாந்த கோரியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறுவதாக இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ஆர்.எம். ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நாட்டின் பல பகுதிகளுக்கு திடீரென மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.
சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துவரும் மின்சார பொறியியலாளர்களின் தலையீட்டுடன் அதனை வழமைக்கு கொண்டு வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ஆர்.எம். ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.