பாணின் விலையை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானத்துக்கமைய, ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் நேற்று அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து, கொத்து ரொட்டி விலையை 10 ரூபாவினாலும் சிறிய உணவுகளுக்கான விலையை 5 ரூபாவினாலும் நாளை (29) முதல் அதிகரிக்கவும் சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் ஏலவே தீர்மானித்துள்ளது.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com
Post Views: 56