இறக்குமதி செய்யப்படுகின்ற நனோ உரத்தின் விலையைக் குறைக்க முடியாதெனக் குறித்த உரத்தை நாட்டுக்குக் கொண்டு வரும் உள்நாட்டு முகவர் நிறுவனமான யுனைட் ஃபாமர்ஸ் ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 5.25 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்படுகின்ற ஒரு போத்தல் நனோ திரவ உரம், இலங்கையில் 12.45 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இது இலங்கை நாணய பெறுமதியில் 2,513 ரூபா 63 சதமாகும்.
இந்நிலையில் விலை குறைப்பு தொடர்பில் கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற யுனைட் ஃபாமர்ஸ் ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மொஹான் பெரேராவிடம் வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், அரசாங்கத்துடனான ஒப்பந்தத்திற்கு அமைய எவராலும் விலை குறைப்பை மேற்கொள்ள முடியாது.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் விலை குறைப்பு தொடர்பான கோரிக்கையை முன்வைக்க முடியும்.
அத்துடன் குறைந்த விலைக்கே உரம் வழங்கப்படுவதாகவும் யுனைட் ஃபாமர்ஸ் ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மொஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com