தேயிலை ஏற்றுமதி மூலம் 1200 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய்

பல தடைகளுக்கு மத்தியிலும் கடந்த நவம்பர் மாத இறுதி வரை தேயிலை ஏற்றுமதி மூலம் 1200 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்துள்ளதாக தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட தெரிவித்துள்ளார்.

கடந்த 125 வருட காலப்பகுதியினுள் முதன் முறையாக கொழும்பு தேயிலை ஏலவிற்பனையினை இணையத்தின் ஊடாக மேற்கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த வருட இறுதியில் 1300 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை எட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, முக்கிய அந்நிய செலாவணியினை ஈட்டும் தொழிலான தேயிலை உற்பத்தி நடவடிக்கைகளில் 5 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.

இது தவிர, நாடளாவிய ரீதியாக 590 தேயிலை தொழிற்சாலைகள் இயங்குவதுடன், 280 நிறுவனங்கள் இலங்கை தேயிலையினை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட தெரிவித்துள்ளார்.

24 மணிசேவையை வழங்கி வருகிறது யாழில் தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்