Home பொதுவானவை தேசிய அடையாள அட்டை: வழங்கும் பணி துரிதம்

தேசிய அடையாள அட்டை: வழங்கும் பணி துரிதம்

132
0

தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவையின் ஊடாக கடந்த வாரம் மாத்திரம் சுமார் 6,000 தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

மேலும், நாளொன்றிற்கு சுமார் 1200 தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்

தொலைபேசி ஊடாக திகதி மற்றும் நேரங்களை முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே இதற்கான அழைப்பு விடுக்கப்படும். இருந்தபோதிலும், தூர பிரதேசங்களில் இருந்து முன் பதிவுகள் மேற்கொள்ளாமல் சிலர் வரும்போது இதுபோன்ற கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.