துறைமுகத்தில் உள்ள உணவு கொள்கலன்கள் குறித்து ஆராய விசேட அதிகாரி

பருப்பு, சீனி, வெங்காயம் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1000 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக அமைச்சின் உள்நாட்டு வர்த்தகத்திற்கு பொறுப்பான மேலதிக செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரனீ ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் 1000 கொள்கலன்கள் எவ்வாறு இங்கு சிக்கியுள்ளன என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏதாவது ஒரு விதத்தில் இந்த கொள்கலன்கள் சிககியிருந்தால்;, அவற்றை உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான டொலர் தொகையை வழங்குமாறு மத்திய வங்கிக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்