வாகனங்கள் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் தண்டப்பணம் அறவிடும் செயற்பாடுகளை தொழில்நுட்பமயப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தாா்.
அநேகமான சந்தர்ப்பங்களில் தண்டப்பணம் செலுத்தி தனது வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள இரண்டு அல்லது மூன்று நாட்கள் செல்கின்றன. அதனால், “SPOT PAID” என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த முறையின் மூலம் தண்டப்பணம் அறவிடப்பட்ட சந்தர்ப்பத்திலேயே தமது கடன்அட்டை அல்லது வேறு முறையில் தண்டப்பணத்தை செலுத்திவிட்டு வாகன அனுமதிப்பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளக் கூடிய புதிய முறையை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டாா்.
அதேபோன்று, தவறு இழைக்கப்படும் சந்தர்ப்பத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யும் நடைமுறையும் இருக்கிறது. கடந்த 10 வருடங்கள் வீதி விபத்துகளினால் 27,000 போ் உயிரிழந்துள்ளனா். இந்த வருடத்தில் நேற்று வரையான காலப்பகுதியில் மாத்திரம் வீதி விபத்துகளில் 2,000 போ் வரையில் உயிரிழந்துள்ளனா்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், போதைப்பொருட்களுடன் வாகனங்களை செலுத்துதல், அதிவேகமாக வாகனங்களில் பயணித்தல் போன்ற காரணங்களினால் இந்த விபத்துகள் இடம்பெறுகின்றன.
சாரதியொருவர் தவறு இழைக்கும்போது அவரது வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தால் ஓரளவு விபத்துகளை குறைத்துக்கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com