வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கும் அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (16) வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 25 மில்லியன் டொலர்கள் தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுநரைத் தொடர்பு கொண்டு 25 மில்லியன் டொலர்களை கோரியதையடுத்து அதனை வழங்குவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த 25 மில்லியன் டொலர்களை வெளியிடும் நடவடிக்கையை இன்றுமுதல் ஆரம்பிக்கவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
உறுதியளித்தபடி விரைவில் டொலர் வழங்கப்படுமாயின் கொள்கலன்களை விடுவிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கலந்துரையாடலில் கலந்துகொண்ட இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் டொலர்கள் இல்லாத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com