ஜப்பானின் கூட்டுத்தாபனம் இலங்கையில் காற்றாலை மின் திட்டம்

200 மெகா வொட் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கான முதலீட்டு வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக மருபேனி கூட்டுத்தாபனத்தின் ஆசியாவிற்கான நிறைவேற்று முகாமைத்துவக் குழு இலங்கைக்கு விஜயம் செய்தது. இந்த விஜயத்தின் போது குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை சந்தித்தனர்.

67 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமுடைய மற்றும் 160 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட மருபேனி கூட்டுத்தாபனம் புதுப்பிக்கத்தக்க சக்தி, ஆடை மற்றும் விவசாயம் தொடர்பான வணிகங்களில் நிபுணத்துவம் பெற்றதாகும். மிதக்கும் சூரிய சக்தியில் முதலீடு செய்வதற்கான ஏனைய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்ற மருபேனி கூட்டுத்தாபனம், விரிவான ஆடை உற்பத்தி அமைப்பை அமைக்குமாறு கோரப்பட்டுள்ளது. இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டி வாகனங்களை அறிமுகப்படுத்துவதுடன், மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யும் வலையமைப்பை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராயுமாறும் அவர்கள் கோரப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து, இலங்கையில் மருபேனி கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதுவர் சஞ்சீவ் குணசேகர ஒருங்கிணைத்து வருகின்றார்.

இலங்கைத் தூதரகம்,
டோக்கியோ
2021 டிசம்பர் 01

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்