சூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய இலங்கையர்கள் 10 பேர் கைது!

கடந்த சனிக்கிழமை இந்தியாவின் பெங்களூருவில் உள்ள கெம்பேகவ்டா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கொழும்பிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற 10 பேர் தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 8 பெண்களும் இரண்டு ஆண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள், இந்தத் தங்கத்தை மலவாயிலில் மறைத்து வைத்து இந்தியாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.

இக்குழுவினர் கடந்த சனிக்கிழமை கொழும்பிலிருந்து பெங்களூருவுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல் 11 என்ற விமானத்தில் இந்தியாவுக்கு பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 1.5 கோடி இந்தியா ரூபா என இந்திய சுங்கத்தினர் தெரிவித்தனர்.

இது இலங்கை நாணயப் பெறுமதியில் 2.5 கோடி ரூபாவுக்கு அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களுடன் தொடர்பைக் கொண்டுள்ள இந்தியர்கள் தொடர்பில் கைதானவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்