சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கை

அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உலக ரீதியாகச் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் குறிப்பாக மாதாந்தம் 250,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குக் கொண்டு வருவது குறித்து முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது நாளாந்தம் 6,000 முதல் 7,000 வரையிலான சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தருகின்றனர்.

ஜேர்மன், பிரான்ஸ், ரஷ்யா உக்ரைன், கசக்ஸ்தான், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோன்று சீனாவிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பணி குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்