கடந்த ஒக்டோபர் மாதத்தில் 22,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதத்தில் 22,771 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதேநேரம், கடந்த 10 மாத காலப்பகுதியில், 60,695 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி, பாகிஸ்தான், கஸகஸ்தான், கனடா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே நாட்டிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! ( tharanysupermarket.com )