கொவிட் வைரஸ் தொற்று காரணமாக பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள சுற்றுலாத்துறைக்கு போதுமானளவு நிதி, பாதீட்டில் ஒதுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நடுத்தர மற்றும் சிறிய சுற்றுலா துறைகளில் ஈடுபட்டோர் பெரும் பாதிப்படைந்துள்ளதாக கேகாலை மாவட்ட விருந்தக சங்கத்தின் தலைவர் வை.ஏ. உதயபிரிய குமார குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலாவணியினை அதிகம் ஈட்டித்தரும் சுற்றுலா துறையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சலுகை அடிப்படையிலான கடன் வசதி வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த மாதம் முதல் மூன்று வாரக் காலப்பகுதியில் மாத்திரம் 29,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை ஒக்டோபர் மாத சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com