சீன உர நிறுவனம் தடை நீடிப்பு

சீன உர நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டிசம்பர் 23 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா அடங்கிய சேதன பசளையை நாட்டிற்கு அனுப்பியதாகக் கூறப்படும் சீன நிறுவனமான குவிங்டாவோ சீவிங் பயோடெக் குறூப் லிமிடட் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி மற்றும் மக்கள் வங்கிக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேதன பசளை இறக்குமதிக்காக குறித்த சீன நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடனுக்கான கடிதத்தின் கீழ் மக்கள் வங்கியினால் எவ்வித கொடுப்பனவுகளையும் வழங்கக் கூடாது என இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்