சீனி தொழிற்சாலையை புனரமைத்து மீள ஆரம்பிக்க நடவடிக்கை

கந்தளாய் சீனி தொழிற்சாலையை புனரமைத்து மீள ஆரம்பிப்பதற்கான சகல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்த ஒரு தேசிய வளமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புச் செய்திகள்