உயர் நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் அமைந்துள்ள புதுக்கடை உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியை முழுமையாகப் புனரமைக்க, 7.68 பில்லியன் ரூபாவை சீன அரசாங்கம் மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் இன்று (7) இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நீதி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே மற்றும் சீன பொருளாதார மற்றும் வர்த்தக விவகார ஆலோசகர் லீ குவாங்ஜுன் (LI Guangjun) ஆகியோருக்கு இடையில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங்கும் (Qi Zhenhong) கலந்துகொண்டார்.
அத்துடன், இலங்கைக்கான சீனத் தூதரகம் மற்றும் நீதி அமைச்சின் உயரதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.
24 மணிசேவையை வழங்கி வருகிறது யாழில் தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com
Post Views: 40