சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் கேஸின் விலை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரசங்ச தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீது நேற்று (17.11.2021) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சந்தைப் பொருளாதாரம் சரிவடையும் நிலைக்கு வந்துள்ளது.கொவிட் காரணமாக நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய டொலர் இல்லாமல் போயுள்ளது. இதற்கு முகங்கொடுப்பதற்காக உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலும் ஏற்றுமதி வலயம் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
1977ஆம் ஆண்டு முதல் கடனில் தங்கியிருந்த செயல்திட்டங்களுக்கு முதலீடு செய்த அனைவரும் தற்போதைய பொருளாதார சரிவிற்கு பொறுப்புக் கூறவேண்டும். சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் கேஸின் விலை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் பல பொருட்களின் விலை மட்டமும் உயர்ந்துள்ளது. இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல என்றும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்பர
இந்த வருடம் 70 ஆயிரம் மெற்றிக் தொன் மஞ்சளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
மஞ்சள் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. 15 லட்சம் மஞ்சள் கன்றுகள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. மானியமும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மஞ்சளின் விலையை கட்டுப்படுத்துவதற்கு வாசனைத் திரவிய கூட்டுத்தாபனம் மத்தியஸ்தம் வகிக்கின்றது. பயிர்ச் செய்கை அபிவிருத்திக்காக கடந்த வருடம் ஆயிரத்து 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன
திறந்த பொருளாதாரக் கொள்கையின் பிரதிபலனையே மக்கள் இன்று எதிர்கொள்வதாகவும் நாடு எதிர்கொண்டுள்ள பிரதான சிக்கல் வறுமை .
இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா
2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பத்து பொருளாதாரத் திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும்இ அவை தற்காலிக மற்றும் தோல்வி அடைந்த கொள்கைகளாக காணப்பட்டன. இன்னும் தற்போதைய அரசாங்கம் சுபீட்சத்தின் தொலைநோக்கு தேசிய கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக நாட்டிற்கும்இ மக்களுக்கும் நன்மைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் கடன் சுமை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் தெளிவான விளக்கம் காணப்படுகிறது. உலகளாவிய ரீதியிலான கொவிட் தொற்றுக்கு மத்தியில் இலங்கையும் அதன் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் உள்ள டொலரின் அளவு குறைந்ததால்இ வெளிநாட்டு நிதி கையிருப்பு சிக்கலுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. உள்நாட்டில் பொருட்களின் விலை மட்டம் அதிகரித்துள்ள சந்தர்ப்பத்தில் அவற்றை இறக்குமதி செய்யும் விடயம் கடந்த காலம் முதல் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாகும். எனினும்இ தற்போதைய அரசாங்கம் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை .முடிந்தளவு வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுஇ நாட்டை பொருளாதார ரீதியில் பலப்படுத்த முடியும் .
🛒 தாரணி சூப்பர்மார்கெட்
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com