பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம்.
நெருக்கடியான நிலைமையை சீர்செய்ய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மாற்று வழிமுறைமை ஊடாக தற்போதைய நிலைமையினை சமாளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் உத்தியோகப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளார்.
தற்காலிக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் ஒரு பொறிமுறையாக சர்வதேச நாணய நிதியம் காணப்படுகிறதால் ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து நாணய நிதியத்தை நாடுமாறு வலியுறுத்துகிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அது அரச ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அரச செயலொழுங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பெரும்பாலான அமைச்சர்கள் அமைச்சரவையின் போது எடுத்துரைத்துள்ளார்கள் என்றார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com