சர்வதேச தரத்திற்கு அமைய வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவிப்பு

தமது நிறுவனம் உயர்தரமான எரிவாயுத் தொழிற்சாலையை முன்னெடுத்து வருவதாக ‘லாவ் காஸ் நிறுவனம்’ தெரிவித்துள்ளது.

இதேபோன்று பங்களாதேஷ், மியன்மார், மாலைதீவு, இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கும் எரிபொருளை விநியோகிப்பதாக நிறுவம் அறிவித்துள்ளது. லாவ்எரிவாயுவில் பிரச்சினைகள் இருந்திருந்தால் அந்நாடுகளில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

ஆனால் அவ்வாறான முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கவில்லை என்று நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.எச்.கே.வேஹப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தமது நிறுவனம் கடந்த 25 வருடங்களாக சர்வதேச தரத்திற்கு அமைய வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தலைவர் டபிள்யு.எச்.கே.வேஹப்பிட்டிய மேலும் கூறினார்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்