சமையல் எரிவாயு, சீமெந்து உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை

சமையல் எரிவாயுவுக்கும், சீமெந்து உள்ளிட்ட கட்டுமானத்துறைசார் பொருட்களுக்கும் சந்தையில் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், சில பிரதேசங்களில், குறித்த பொருட்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

சீனி, அரிசி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால், நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

12.5 கிலோகிராம் லிற்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் உச்சபட்ச சில்லறை விலை 2,675 ரூபாவாகவும், லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் உச்சபட்ச சில்லறை விலை 2,840 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

எவ்வாறிருப்பினும், சில பிரதேசங்களில் குறித்த விலையை விடவும், அதிகரித்த விலையில் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினமும் அதனைக் கொள்வனவு செய்வதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! ( tharanysupermarket.com )

சிறப்புச் செய்திகள்