காலி பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் சதொச வர்த்தக நிலையத்திற்குள், அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து அங்கிருந்து பொருட்களைக் கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாகக் காலி காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதொச வர்த்தக நிலையத்தின் கண்ணாடியை உடைத்து, சந்தேகநபர்கள் உள்ளே நுழைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.