கொத்துரொட்டி, சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து கொத்து ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் (ஷோர்ட் ஈட்ஸ்) விலைகளை நாளை (29) முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொத்துரொட்டியின் விலையை 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சந்தையில் கோதுமைமாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் கோதுமை மா கிலோவொன்றின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் நேற்று அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்