நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க முதலீடாக நாட்டின் முதலாவது கேபிள் கார் திட்டம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்.

இதன்படி, விசேட அபிவிருத்தித் திட்டமான நுவரெலியா நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமான கேபிள் கார் திட்டம் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நானுஓயாவிலிருந்து நுவரெலியா வரையிலான 4 கிலோமீற்றர் கேபிள் கார் திட்டத்திற்கு சுவீடன் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ் இரண்டு கட்டங்களாக நிதி வழங்கப்படவுள்ளது.

அடுத்த 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com