அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் தரம் 6, 7, 8 மற்றும் 9 தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (22) ஆரம்பமாகின்றன.
இதற்கமைவாக இன்றிலிருந்து நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் சுகாதாரப் பரிந்துரைகளுக்கு அமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் தென்படின் மாணவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாமென்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்..
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com
Post Views: 33