இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய ஏழு பயிர்களுக்கான விதைகளின் இறக்குமதியை அடுத்த ஆண்டில் மட்டுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் அமைச்சில் நேற்று (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கிழங்கு, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், மிளகாய், உளுந்து, சோளம் மற்றும் நிலக்கடலை முதலான பயிர்களின் விதைகளை, நாட்டில் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம், தற்போது சாதகமான பிரதிபலனை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி அளுத்கம மிளகாய் விதை உற்பத்திக் கிராமத்தில், தற்போது 1,500 கிலோகிராம் கலப்பு விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
தம்புள்ளை திகம்பத்தன பகுதியில் பெரிய வெங்காய விதையும், உருளைக்கிழங்கு விதை நுவரெலியாவில் உள்ள அரச விளைநிலத்திலும் உற்பத்தி செய்யப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விதை இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு மேலதிகமாக, 2024 ஆம் ஆண்டாகும்போது, மிளகாய் இறக்குமதியை முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என விவசாயத்துறை பணிப்பாளரான கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பனவற்றின் இறக்குமதியை, 35 அல்லது 30 சதவீதங்களுக்கு மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com