ஏற்றுமதி தரப்பினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி இலக்கினை எட்டுவதற்கு பொது மற்றும் தனியார் தரப்பினர் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த உறுதியினை வழங்கினார்.

அதேவேளை, ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் முதன் முதலாக விருது வழங்கும் நிகழ்வு கடந்த 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

2019/2020 மற்றும் 2020/2021 ஆண்டுகளுக்கான விருது வழங்கும் நடவடிக்கையின் போது மிகச் சிறந்த ஏற்றுமதியாளர்களாக அடையாளம் காணப்பட்ட 63 நிறுவனங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com