தீப்பற்றியதன் பின்னர் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (15) இடம்பெற்றது.
நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கடற்படை, துறைமுக அதிகார சபை மற்றும் நாரா உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீனவ சமூகத்துக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
🛒 தாரணி சூப்பர்மார்கெட்
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com
Post Views: 29