பழுதடைந்த உலோக ஏற்றுமதியை இடைநிறுத்தும் தீர்மானத்தினால் உலோக தொழிற்துறையில் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பன்னலையில் உள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபை வளாகத்தில் நேற்று(03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள், உபகரணங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் அந்நிய செலாவணி பெருமளவில் சேமிக்கப்படுவதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
Post Views: 50