உலக வங்கியுடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்து

இலங்கையின் விவசாய விநியோக வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் உலக வங்கியுடன் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

உலக வங்கி தெற்காசிய வலயத்தின் உப தலைவர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோருக்கிடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது.

அத்துடன், குறித்த ஒப்பந்தம்மூலம் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட 16 மில்லியன் மக்கள் நன்மையடையவுள்ளனர்.

இதுதவிர, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராம பாதைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

சிறப்புச் செய்திகள்