புதிய ஒமிக்ரொன் வைரஸ் திரிபினால் ஏற்பட்ட சர்வதேச பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையை அடுத்து, வார இறுதியில் உலகளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,783 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

அதேவேளை சந்தை ஆய்வாளர்கள் அடுத்த மூன்று முதல் நான்கு வாரங்களில் தங்கம் விலை குறைவதில் சாத்தியமில்லை என தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் தங்கத்தின் விலை ஒரு மாத இடைவெளியில் குறைவடைந்தபோதிலும் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com