உரிய தரத்துடனான சிறந்த பலனைத் தரக்கூடிய தாவர ஊட்டச்சத்து உரத்தை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாய நிபுணர்கள் உள்ளிட்டோர் ஜனாதிபதியிடம் முன்வைத்த விவசாய திட்டத்திற்கு ஏற்ப இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, நாட்டுக்கு தேவையான சிறந்த பலனைத் தரக்கூடிய பரிந்துரை செய்யப்பட்டுள்ள உரங்களை இறக்குமதி செய்து, துரிதமாக பயிர்நிலங்களுக்கு விநியோகிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர், சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
யூரியா உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட சில உர வகைகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்குத் தேவையான முற்பதிவுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஏற்றுமதி, இறக்குமதி அதிகாரங்களுக்கு ஏற்ப அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com