எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணை மாத்திரமன்றி தற்போது உரத்திற்காகவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

தம்புள்ளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேற்றிரவு இரசாயன உரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து விவசாயிகள் உரத்தை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சந்தைக்கு மரக்கறிகளுக்காக பயன்படுத்தப்படும் இரசாயன உரம் மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளதோடு அவை 8,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

50 கிலோ கிராம் நிறையுடைய உர மூடை கடந்த காலங்களில் ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் தற்போது விலை வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றது.

இதேவேளை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது விளைச்சல் மிகவும் குறைவடைந்துள்ளதாக கவலை வெளியிடுகின்றனர்.

கிண்ணியாவில் உள்ள பூவரசந் தீவு நெற்செய்கை விவசாயிகளும் பசளை இன்மையால் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வெயாங்கொட – யட்டகம பகுதியில் தென்னை தோட்டத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து 20 மூடை யூரியா உரத்தை திருடிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி குறித்த சந்தேகநபர் இவ்வாறு உரத்தை திருடியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் குறித்த உரத்தை அநுராதபுரம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் உர மூடைகள் 60 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


இலங்கை சூப்பர்மார்க்கெட் வரலாற்றில் முதன் முறையாக, நாளாந்தம் ஒரு வெற்றியாளர்…

நீங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான சிட்டையினை (Bill) குலுக்கல் முறைக்கு உட்படுத்துவதன் மூலம் சிட்டையில் உள்ள மொத்தக் கொள்வனவுப் பெறுமதியில் மீண்டும் இலவசமாக பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய வவுச்சர்களை உங்கள் தாரணி_சூப்பர்மார்க்கெட் வழங்கிவருகின்றது.

(யாழ் மாவட்டத்தின் எந்தவொரு மூலையில் இருந்தும் ஒன்லைன் ஓடர் மூலம் பொருட்களை கொள்வனவு செய்பவர்களும் இச் சீட்டிழுப்பில் பங்குபற்ற முடியும்)

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெற்றியாளர்… இவ் அதிரடிச் சலுகை 22.12.2021 முதல் 01.01.2022 வரை.

அத்துடன் 100 வரையான பொருட்களை இக் காலப் பகுதியில் விசேட விலைக்கழிவில் கொள்வனவு செய்யும் வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளுங்கள் (Terms and Condition Apply)
மேலதிக தகவலுக்கு இன்றே நேரடியாக விஜயம் செய்யுங்கள்…

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24_மணிசேவை-யை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது.

( தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் )

* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.

* டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்

* நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)

077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881

No. 758 Kankesanturai Road, Jaffna

Shop Now: tharanysupermarket.com

Google Map: https://goo.gl/maps/TGUngZfzNmx411Pg8