மூன்றாம் மற்றும் நான்காம் வகை உரங்களை மீள நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இன்று (22) முற்பகல் 10.30 அளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதன்போது மூன்றாம் மற்றும் நான்காம் வகை உரங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பான அனுமதி ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சசீந்ர ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, நெல், சோளம், மரக்கறி மற்றும் பெருந்தோட்ட தொழிற்துறைக்கு தேவையான தாவர ஊட்டச்சத்து மற்றும் விவசாய இரசாயன திரவியங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் நேற்று (21) அறிவித்தார்.
எவ்வாறாயினும் நெல் மற்றும் மரக்கறிகளுக்கான இரசாயன உரம் அல்லது கிருமி நாசினிகளை இறக்குமதி செய்வது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com