ஜனாதிபதியினால், உப்பு இறக்குமதி தடை செய்யப்பட்டதன் பின்னர் உள்ளூர் உப்பு உற்பத்தியில் அதிக இலாபம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலாபம் காரணமாக உப்பு நிறுவனம், தமது 1,600 ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் விசேட கொடுப்பனவை வழங்கியதாக அதன் தலைவர் நிஷாந்த சந்தபாரண தெரிவித்துள்ளார்.

வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட 30 கோடி ரூபாவினை செலுத்தியதன் பின்னர் 2021 ஆம் ஆண்டில் இலாப சாதனையாக 17 கோடி ரூபா பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், புத்தளம் பகுதியில் உப்பு உற்பத்திக்கு ஏற்ற 400 ஏக்கர் விஸ்தீரணமான நிலத்தை கையேற்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com