உணவு பற்றாக்குறையை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

உணவு பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இதற்காக நாடளாவிய ரீதியில் பயிர்செய்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத காலப்பகுதியில் உணவு தட்டுப்பாட்டிற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இயற்கை வள பேராசிரியர் மெத்திகா விதானகே எதிர்வு கூறியுள்ளார்.

உர தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் தொடர்ந்தும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அதேநேரம், தாம் பணம் செலுத்தியுள்ள போதிலும், இன்னும் உரம் கிடைக்கவில்லையென சோளப் பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்