உணவகங்களில் இனி பால் தேநீர் கிடைக்காது

பால்மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீர் விற்பனையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பால்மா விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கோப்பை பால் தேநீரை 80 ரூபாவுக்கு விற்பனை செய்ய நேரிடும் என அதன் செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

பால் தேநீரின் விலையை அதிகரித்து மக்களை சிரமத்துக்குள்ளாக்குவதை விட, பால் தேநீர் விற்பனையிலிருந்து விலகுவது நன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாளை முதல் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர்.

அதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்று 1,345 ரூபாவுக்கும், 400 கிராம் பொதியொன்று 540 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24_மணிசேவை-யை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற  வழி செய்கிறது.

( தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் )

* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.

* டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்

* நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)

077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881

No. 758 Kankesanturai Road, Jaffna

Shop Now: tharanysupermarket.com

Google Map: https://goo.gl/maps/TGUngZfzNmx411Pg8

சிறப்புச் செய்திகள்