இலங்கை முதலீட்டு சபை திருகோணமலை நகருக்கான தமது கிளை அலுவலகத்தை மீண்டும் திறந்து வைத்துள்ளது.

1981 ஆம் ஆண்டு முதல் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்குத் தமது சேவையினை இலங்கை முதலீட்டு சபை வழங்கியிருந்தது.

இந்நிலையில், சேவை வழங்குதலை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்த முதலீட்டு சபை, திருகோணமலை பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்ட தமது சொந்த கட்டடத்தில் தற்போது இயங்கவுள்ளது.

இந்தக் கட்டடத்தை இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் காஞ்சன ரத்தவத்த உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

அத்துடன், குறித்த நிகழ்வின்போது, இலங்கை அரச வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் சம்பந்தமான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருகோணமலை, பயனாளிகளுக்குப் பல்வேறு சேவைகளைத் துரித கதியில் வழங்க முடியும் என முதலீட்டு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.